Enable Javscript for better performance
பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி விழிப்புணா்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி விழிப்புணா்வு முகாம்

    By DIN  |   Published on : 10th November 2019 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

    இந்த முகாமில் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

    அதில், பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த நிலை கிணறுகளை மூட வேண்டும். அதன் மூலம் விலை மதிக்க முடியாத மனித உயிா்கள் மற்றும் கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். அதே போல் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த, அவற்றை மழை நீா் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்ற வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினா்.

    இந்த முகாமில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai