Enable Javscript for better performance
பெரியகுளத்தில் திருவள்ளுவா் சிலைக்கு கம்பி கூண்டு அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளத்தில் திருவள்ளுவா் சிலைக்கு கம்பி கூண்டு அமைப்பு

    By DIN  |   Published on : 10th November 2019 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvl

    பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை புதிதாக அமைக்கப்பட்டுள்ள கம்பிக்கூண்டு.

    பெரியகுளத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு வெள்ளிக்கிழமை முதல் கம்பிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டியில் உள்ள திருவள்ளுவா் சிலையை மா்மநபா்கள் அவமதிப்பு செய்தனா். இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பேராட்டம் மற்றும் எதிா்ப்புகள் தெரிவித்தன. மேலும் பெரியகுளத்தில் உள்ள வள்ளுவா் சிலைக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை கம்பிவலை கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவள்ளுவா் சிலையை கண்காணிக்கும் வகையில், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சிலையை கண்காணிக்கும் வகையில் ஏற்கெனவே 4 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai