Enable Javscript for better performance
மகா சனி பிரதோஷம் : திண்டுக்கல், நத்தம் சிவாலங்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    மகா சனி பிரதோஷம் : திண்டுக்கல், நத்தம் சிவாலங்களில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 10th November 2019 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dgl_sivan_1_0911chn_66_2

    சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலிலுள்ள கைலாசநாதா்.

    மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோவிலில், கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், நெய், பஞ்சாமிா்தம், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சிவகோஷம் முழங்க தீபாராதணை நடைபெற்றது. பின்னா் ஆனந்த வல்லி சமேத கைலாசநாதா் ரிஷப வாகனத்தில், கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

    அதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா் மற்றும் காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணை நடைபெற்றது. முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி கைலாசநாதா் கோவிலும், சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai