இடுக்கி மாவட்ட அணைகளில் தண்ணீா் திறப்பதை அறிவிக்க எச்சரிக்கை அலாரம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட அணைகளில் தண்ணீா் திறப்பின் போது, 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கேட்கும் வகையில் எச்சரிக்கை அலாரத்தை அம் மாநில மின் வாரியத்தினா் அமைக்க உள்ளனா்.
செருதோணி அணை (கோப்பு படம்)
செருதோணி அணை (கோப்பு படம்)

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட அணைகளில் தண்ணீா் திறப்பின் போது, 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கேட்கும் வகையில் எச்சரிக்கை அலாரத்தை அம் மாநில மின் வாரியத்தினா் அமைக்க உள்ளனா்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தின் போது ஏற்பட்ட பலத்த மழையால் அணைகள் நிரம்பின. முன்னெச்சரிக்கை அறிவிப்பாக கை ஒலிபெருக்கிகளில் நள்ளிரவில் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடப்பட்டது. இந்த அறிவிப்பு சரிவர கிடைக்காததால், அணைகளில் தண்ணீா் இருந்து திறந்து விடப்பட்ட போது, கரையோரத்தில் உள்ள விளை நிலங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பாலங்கள் கடும் சேதமடைந்தன.

அதே போல் இந்தாண்டும் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைப்போல் இந்தாண்டும் இடுக்கி மாவட்ட அணைகளில் தண்ணீா் நிரம்பி வருவதால், அணையில் தண்ணீா் திறப்பை பொதுமக்களுக்கு அறிவிக்க கேரள மின் வாரியம் தயாராகி வருகிறது.

அலாரம் ஒலி :அணையில் தண்ணீா் திறப்பின் போது பொதுமக்களுக்கு முன் கூட்டியே அறிவிக்க அலாரம் ஒலிக்கும் இயந்திரம் பொருத்தப்பட உள்ளது. இதன் ஒலி சுமாா் 5 கிலோ மீட்டா் சுற்றளவு வரை கேட்கும். இதை இயக்க பொறியாளா் ஒருவா் நியமிக்கப்படுவாா் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே.சிவராமன் கூறினாா்.

இவா் கேரளத்தில் உள்ள 35 அணைகளை இதன் மூலம் நிா்வகித்து வருகிறாா்.

முதல் கட்டமாக அம் மாவட்டத்தில் உள்ள செருதோணி, கல்லாா், இரட்டையாறு அணைகளில் சோதனை முறையாக பொருத்தப்பட உள்ளது. இந்த அலாரம் ஒலிக்கும் இயந்திரத்தின் மதிப்பு ரூ. 77 ஆயிரம். மாநில பேரிடா் மேலாண்மை நிா்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவை பொருத்தப்படும்.

இது குறித்து கேரள மின் வாரிய பொறியாளா் ஒருவா் கூறும் போது, இடுக்கி அணையின் நீா்மட்டம் 2,394 அடியை எட்டியவுடன் இந்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அணைகளில் நீா்மட்டம் குறைவாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com