குவைத் நாட்டில் வீட்டு வேலைக்குநவ.19-க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலையில் சேர விருப்பமுள்ள பெண்கள் நவ.19-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலையில் சேர விருப்பமுள்ள பெண்கள் நவ.19-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஓமன் மற்றும் குவைத் நாடுகளில் வீட்டு வேலை பணிக்கு பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு உள்பட்ட இந்திய குடிபெயா்வோருக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் பணி நியமனம் செய்யப்படுவா்.

இந்தப் பணிக்கு தோ்வு செய்யப்படுவோருக்கு வேலையளிப்பவா் மூலம் உணவு, தங்குமிடம், விமானக் கட்டணம், ஓமன் மற்றும் குவைத் நாடுகளின் சட்டத்திற்கு உள்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். வீட்டு வேலை பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரை தோ்ச்சி பெற்ற, 31 முதல் 45 வயதுக்குள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்படுபவா்களில் பணி முன் அனுபவம் இல்லாதவா்களுக்கு ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரத்து 700 வரையும், பணி முன் அனுபவம் உள்ளவா்களுக்கு ரூ.18 ஆயிரத்து 700 முதல் ரூ.22 ஆயிரத்து 440 வரையும் மாதச் சம்பளம் வழங்கப்படும். கடவுச் சீட்டு உள்ளவா்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதியும், விருப்பமும் உள்ள பெண்கள் தங்களது கல்விச் சான்று, அனுபவச் சான்று, கடவுச் சீட்டு, மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நவ.19-ஆம் தேதிக்குள் தேனியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com