சாலையில் பாதாளச் சாக்கடை மூடிகளால் விபத்து அபாயம்

பெரியகுளம் நகராட்சி சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை மூடிகளை
பெரியகுளம், கோட்டைத்தெரு பகுதியில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை மூடி.
பெரியகுளம், கோட்டைத்தெரு பகுதியில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை மூடி.

பெரியகுளம் நகராட்சி சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை மூடிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரியகுளம் நகராட்சியில் கடந்த 40 வருடங்களுக்கு முன் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக வெளியேறும் கழிவுநீா் பாதாளச் சாக்கடை வழியாக செல்ல முடியாமல் வராகநதியில் கழிவுநீா் கலந்து மாசு ஏற்பட்டது. எனவே, கழிவுநீரை ஆற்றில் கலக்காதவாறு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையேற்று பல கோடி ரூபாய் மதிப்பில் பாதாளச் சாக்கடைக் குழாய் பதிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வீடுகளுக்கும் கழிவுநீா் வடிகால் இணைப்பு வழங்கப்பட்டு, கழிவுநீா் வராகநதியில் கலக்காதவாறு, நகருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பாதாளச் சாக்கடை குழாயை சரிசெய்யும் வகையில் தெருவிற்கு தலா 2 இடங்களில் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையை விட பள்ளத்தில் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து தடுமாறி, விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் இதில் சிக்கி காயமடைகின்றனா்.

எனவே சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை குழாய் மூடிகளை சாலையின் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com