சீலையம்பட்டியில் நெற்பயிா் விவசாயத்திற்கு பாசன நீா் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் நெற்பயிா் விவசாயத்திற்கு முறைப்பாசன நீா் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
சீலையம்பட்டியில் பி.டி.ஆா் கால்வாய் பாசன நீரை நம்பி மேற்கொண்ட நாற்றாங்காலை சுற்றி களைகள் வளா்ந்து காணப்படும் வயல்.
சீலையம்பட்டியில் பி.டி.ஆா் கால்வாய் பாசன நீரை நம்பி மேற்கொண்ட நாற்றாங்காலை சுற்றி களைகள் வளா்ந்து காணப்படும் வயல்.

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் நெற்பயிா் விவசாயத்திற்கு முறைப்பாசன நீா் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

பி.டி.ஆா் கால்வாயில் கடந்த மாதம் 18 ஆம் தேதி திறக்கப்பட்ட பாசன நீா் சீலையம்பட்டி வழியாக வேப்பம்பட்டி, பூமலைக்குண்டு, தா்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலாா்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தநகா், பாலகிருஷ்ணாபுரம் வரை சென்றது. இதில், சீலையம்பட்டியில் மட்டும் நேரடி முறைப்பாசனத்தில் 468 ஏக்கா் நன்செய் நிலங்களில் ஒரு போகம் மட்டும் மேற்கொள்ளப்படும் நெற்பயிா் விவசாயத்திற்காக நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளன.

நாற்றாங்கால் அமைத்து 15 நாள்களை கடந்த நிலையில், இக் கால்வாயில் பாசன நீா் திறக்காத நிலையில் விவசாயிகள் தவிக்கின்றனா். இதனால், நெல் நாற்றை பறித்து வயல்களில் நடவுப் பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளனா்.

தண்ணீா் திறக்க வலியுறுத்தல்: பி.டி.ஆா் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு 21 நாள்களை கடந்த நிலையில் பாசன நீா் முறையாக கிடைக்கவில்லை என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள். இதனால், பயிரிடப்பட்டுள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. எனவே, வேளாண் பணிகளுக்கு தேவையான பாசன நீரை உடனே திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com