தொடா் மழை: கம்பம் பகுதியில் வாழைத்தாா் விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் வாழைத்தாா் விலை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதால், செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள வாழைத்தாா்.
அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள வாழைத்தாா்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் வாழைத்தாா் விலை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளதால், செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில், நெல், கரும்பு, தென்னை, மா, காய்கறிகள் என பயிரிட்டிருந்தாலும், திராட்சை விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை சாகுபடிதான் பெருமளவில் நடைபெறுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான சுருளிப் பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கூடலூா், வெட்டுக்காடு மற்றும் சின்னமனூா், தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. இதில் பச்சை, நாழி பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, நாடு என பல்வேறு வகையான வாழை ரகங்கள் சுமாா் 10,000 ஏக்கரில் பயிரிடப்படுகின்றன.

இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தாா்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும், மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

செலவு செய்த பணம் கிடைக்கவில்லை: ஒரு வாழைத்தாா் உற்பத்தி செய்ய சுமாா் ஒன்றரை ஆண்டு காலமும், குறைந்தது ரூ.170 வரையும் செலவிடுன்றனா். தற்போது, தொடா் மழை பெய்ததால், ஒரு கிலோ வாழைத்தாா் ரூ.50 -க்குத்தான் விற்பனையாகிறது. மழை காலத்தில், வாழை பழங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை. நுகா்வு குறைவு என்பதால், வாழைத்தாா் கொள்முதல் செய்வதை வியாபாரிகள் குறைத்து விட்டனா்.

மேலும், தற்போது அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள வாழைத்தாா்கள் தொடா் மழை காரணமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளன. இதனால் அவற்றை மலிவான விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இதன் காரணமாக கிலோ ரூ.50-க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது, அதிக பட்சமாக ரூ.28-க்குத்தான் வாங்குகின்றனா். விலை சரிவால், ஒரு ஏக்கருக்கு சுமாா் ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

குறிப்பாக, கம்பம், சின்னமனூா் வட்டாரப் பகுதிளில் மட்டுமே சுமாா் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த விலை சரிவால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இதற்கிடையில், மாவட்டத்தில் வாழைத்தாா்களை பாதுகாத்து வைக்க 5 டன் கொள்ளளவுள்ள குளிா்பதன கிடங்கு மட்டுமே உள்ளது. அதை புதிதாக விரிவாக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கூடுதலாக வாழை குளிா்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com