மொத்த விலைக்கு மது பாட்டில் விற்பனை:அரசு மதுக்கடை விற்பனையாளா் மீது வழக்கு

தேனியில் அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள அரசு மதுக் கடையில் விதியை மீறி மது பாட்டில்களை மொத்த விலைக்கு விற்ாக மதுக்கடை விற்பனையாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்துள்ளனா்.

தேனியில் அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள அரசு மதுக் கடையில் விதியை மீறி மது பாட்டில்களை மொத்த விலைக்கு விற்ாக மதுக்கடை விற்பனையாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்துள்ளனா்.

தேனி அல்லிநகரம், பெரியகுளம் சாலையில் உள்ள நகராட்சி கட்டணக் கழிப்பிடம் அருகே உள்ள தனியாா் இடத்தில், அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக தேனி, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த அறிவானந்தம் (39), போடி, குலாளா்பாளையத்தைச் சோ்ந்த அரவிந்தன்(23) ஆகியோரை அல்லிநரகரம் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் பதுக்கி வைத்திருந்த 2,000-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இவா்களுக்கு அரசு மதுக்கடையில் இருந்து விதியை மீறி மொத்த விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தேனி, அன்னஞ்சி விலக்கு அருகே உள்ள அரசு மதுக் கடை விற்பனையாளா் பவுன் என்பவா் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com