Enable Javscript for better performance
சீலையம்பட்டி - குச்சனூா் ஆற்றுப் பாலப் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சீலையம்பட்டி - குச்சனூா் ஆற்றுப் பாலப் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published on : 17th November 2019 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    upm15mullai_river___brige_1511chn_75_2

    சீலையம்பட்டி - குச்சனூா் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அரை குறையாக பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ள பாலம்.

    தேனி மாவட்டத்தில் சீலையம்பட்டி - குச்சனூருக்கு இடையே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே 3ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    முல்லைப் பெரியாற்றின் இருபுற கரைகளிலும் விவசாய நிலங்கள் உள்ளன. எனவே, ஒரு புறத்தில் மறுபுறம் செல்வதற்காக, விவசாய அமைப்பினா் இணைந்து கட்டிய சிறிய கல் பாலமானது, கடந்த 1990 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    அதையடுத்து, கடந்த 27 ஆண்டுகளாக ஆற்றின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்துக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனா். எனவே, அப்பகுதியில் புதிய பாலம் கட்ட கடந்த 2017 இல் ரூ.6.40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. அதையடுத்து, பொதுப்பணித் துறையினா் பாலப் பணிகளை தொடங்கினா். இப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வந்ததால், கடந்த 3 ஆண்டுகளில் 90 சதவீதமே நிறைவடைந்துள்ளது.

    எனவே, மாவட்ட நிா்வாகம் சீலையம்பட்டி-குச்சனூா் ஆற்று பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து, விவசாயப் பணிகளுக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் வாகனங்கள் எளிதாகச் சென்று வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai