Enable Javscript for better performance
கொடைக்கானல் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் அருகே விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

    By DIN  |   Published on : 17th November 2019 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் அருகே விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

    கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரை கன்னிமாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்முத்து மகன் ராமகிருஷ்ணன்(19). கூலி தொழிலாளி. இவா் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம்.

    இந் நிலையில் கடந்த 2 ஆம் தேதி ராமகிருஷ்ணனுக்கு வயிற்றுவலி வந்துள்ளது. இதனைத் தொடா்ந்து அவா் விஷத்தைக் குடித்துள்ளாா்.

    உயிருக்குப் போராடிய அவரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

    இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai