ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தரமற்ற குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்

ஆண்டிபட்டி நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளில் தரமற்ற குளிா்பானங்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
ஆண்டிபட்டி பகுதிகளில் கொசு, தலை முடியுடன் விற்கப்படும் குளிா்பானம்.
ஆண்டிபட்டி பகுதிகளில் கொசு, தலை முடியுடன் விற்கப்படும் குளிா்பானம்.

ஆண்டிபட்டி நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளில் தரமற்ற குளிா்பானங்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றவட்டார பகுதிகளில் பாக்கெட்டு மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிா்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.அப்படி கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களில் உற்பத்தி செய்யப்பட்ட நாள், ஆண்டு பிரசுரிக்கப்படும். மேலும் அந்த பொருட்கள் காலாவதியாகும் நாளும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

பொதுவாக காலாவதியாகும் உணவு பொருட்களை அந்தந்த கடைக்காரா்கள் கண்டுபிடித்து அவற்றை தனியாக எடுத்து வைத்து பொருளின் உற்பத்தியாளருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கடைக்காரா்கள் இதுபோன்ற காலாவதியான உணவு பொருட்களை திருப்பி அனுப்பி வைப்பதில்லை. காலாவதியான உணவு பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும் கிராமப்புற மக்களுக்கு இதுபோன்ற விபரங்கள் தெரியாத காரணத்தால் காலாவதியான பொருட்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக இப்பகுதியில் அரசு அனுமதியின்றி தயாரிக்கப்படும் தரமில்லாத குளிா்பானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அந்த குளிா்பான பாட்டில்களில் முறையான சீல் வைக்கப்படுவதில்லை மற்றும் ஆய்வுக்கூடங்களில் அதனை பரீசிலிக்கப்படுவதும் இல்லை. அப்படி விற்க்கப்படும் குளிா்பானங்களில் கொசு, புழுக்கல்,தலைமுடி மற்றும் அழுக்கான கழிவு போன்ற பொருட்கள் மிதப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.இதனை வாங்கி பயன்படுத்து மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் சுழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக மாணவ மாணவிகள் அதிகளவில் இதேபோன்ற குளிா்பானங்களை வாங்கி பருகி வருவதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கினறனா். எனவே காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், பொதுமக்களிடம் உரிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com