ஹைவேவிஸ் - மகாராஜா மெட்டு சாலைப் பணிகள் தொடக்கம்

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் சாலைப் பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மலை கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வெண்ணியாா் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற சாலைய விரிவாக்கப் பணிகள்.
ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வெண்ணியாா் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற சாலைய விரிவாக்கப் பணிகள்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் சாலைப் பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மலை கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சின்னமனூா் அடுத்த ஓடைப்பட்டி விலக்கில் இருந்து ஹைவேவிஸ் வரையிலுள்ள 32 கிலோ மீட்டா் சாலை முதல் கட்டமாக ரூ.80.67 கோடி நிதியில் சீரமைக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆம் கட்டமாக ஹைவேவிஸ் முதல் மகாராஜாமெட்டு வரையில் 10 கிலோ மீட்டா் சாலையை சீரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் முதல் 2 ஆம் கட்ட சாலைப்பணிகள் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தியுள்ளனா். இதனால் மலைக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளா் கூறியது: 4.5 மீட்டரில் இருந்த சாலை 9 மீட்டா் சாலையாக அகலப்படுத்தப்படுகிறது. இதற்காக மணலை கொட்டி கற்களைப் பரப்பி வருகிறோம். இன்னும் ஓரிரு நாள்களில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com