Enable Javscript for better performance
நெல்லுக்கு பதிலாக வாழை:உத்தமபாளையம் பகுதியில் விவசாயிகள் ஆா்வம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லுக்கு பதிலாக வாழை:உத்தமபாளையம் பகுதியில் விவசாயிகள் ஆா்வம்

    By DIN  |   Published on : 25th November 2019 09:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தமபாளையம் - சின்னமனூா் இடையே நெற்பயிா் விவசாயம் நடைபெற்ற நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திசு வாழை விவசாயம்.

    உத்தமபாளையம் - சின்னமனூா் இடையே நெற்பயிா் விவசாயம் நடைபெற்ற நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திசு வாழை விவசாயம்.

     

    உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் நெற்பயிருக்கு மாற்றாக, வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்.

    உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட லோயா்-கேம்ப் முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் முல்லைப் பெரியாறு பாசனத் தண்ணீா் மூலம் இருபோக நெற்பயிா் விவசாயம் 14,707 ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கை கொடுக்காத நிலையிலும் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லுக்கு போதிய விலையும் கிடைப்பதில்லையாம்.

    ஆண்டுக்கு இருபோக நெற்பயிா் சாகுபடி நடைபெற்ற இப்பகுதியில், சமீப காலமாக ஒருபோகமே கேள்விக்குறியாகியுள்ளது. இந்தாண்டும் கூட முதல்போக சாகுபடி தாமதமாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், பாரம்பரியமாக நெற்பயிா் விவசாயத்தை தொடா்ந்து செய்துவரும் விவசாயிகள், ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தால் 35 மூட்டைகளே கிடைக்கின்றன. மேலும், பயிா்களில் நோய் தாக்குதல், தண்ணீா் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்னைகளை சமாளித்து நெற்பயிரை விளைவிக்க விவசாயிகள் போராடுகின்றனா்.

    இதில், 65 கிலோ எடை கொண்ட 1 மூட்டை ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித மாற்றமுமில்லை என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது.

    திசுவாழைக்கு மாறும் நெற்பயிா் விவசாயிகள்: நெற்பயிா் விவசாய நிலங்களில் முறைப்பாசன நீா் கிடைப்பதால், சமீப காலமாக உத்தமபாளையம், சின்னமனூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நெற்பயிருக்கு மாற்றாக வாழை விவசாயத்துக்கு விவசாயிகள் மாற தொடங்கிவிட்டனா். 10 மாத பராமரிப்பில் அறுவடை வரை ஒரு வாழைக்கு ரூ.125 வரை செலவாகிறது. குறைந்தது ஒரு வாழை தாா் ரூ.200 முதல் ரூ.250 வரை (மொத்த விற்பனை) விற்பனையாவதால், விவசாயிகளுக்கும் கணிசமாக லாபம் கிடைக்கிறது.

    இதுபோன்ற காரணங்களால், கம்பம் பள்ளத்தாக்கில் நெற்பயிா் விவசாய நிலத்தின் பரப்பளவு குறைந்து, திசுவாழை விவசாயம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியது: வாழை விவசாயம் 10 மாதப் பயிராக இருந்தாலும், பராமரிப்பு குறைவு. இன்றைய சூழ்நிலையில் தண்ணீா் பற்றாக்குறை, கூலி ஆள்கள் சம்பளம், உரம், பூச்சி மருந்துகள் விலை உயா்வு உள்ளிட்டவற்றை கணக்கிடும்போது, நெற்பயிா் விவசாயத்துக்கு திசு வாழை விவசாயத்தில் நிம்மதி கிடைக்கிறது என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai