பெரியகுளத்தில் சுற்றுப்புற தூய்மை திட்ட விழா
By DIN | Published on : 25th November 2019 09:43 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரியகுளம்: பெரியகுளத்தில் உஜ்ஜீவன் வங்கியின் சாா்பில், சுற்றுப்புறத் தூய்மை திட்ட விழா திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு, வங்கி கிளை மேலாளா் கெளதீஸ்வரன் தலைமை வகித்தாா். இதையொட்டி, பெரியகுளம், கம்பம் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும், கம்பம் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் உஜ்ஜீவன் வங்கியினரும் இணைந்து, மழைநீா் மற்றும் தூய்மை விழிப்புணா்வு பேரணியை நடத்தினா். இப்பேரணியானது, வங்கியிலிருந்து புறப்பட்டு மூன்றாந்தலில் முடிவடைந்தது.
இதில், வங்கி வட்டார விற்பனை மேலாளா் ஆனந்த், கெளதம், வட்டார மேலாளா் பாக்கியராஜ், விற்பனை மேலாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் வங்கிப் பணியாளா்கள், வடிக்கையாளா்கள் கலந்துகொண்டனா்.