முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடியில் நவ.30-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 26th November 2019 06:04 AM | Last Updated : 26th November 2019 06:04 AM | அ+அ அ- |

போடி, ஜ.க.நி. மேல்நிலைப் பள்ளியில், நவம்பா் 30-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு மதுரைக் கிளை அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெறவுள்ள இம்முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, பணியாளா்களைத் தோ்வு செய்கின்றன.
இம் முகாமில், 8-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, தொழிற் பயிற்சி படிப்பு, செவிலியா் பயிற்சி படிப்பு, பொறியியல் மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் வரை உரிய சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு பெறலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.