முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 06:04 AM | Last Updated : 26th November 2019 06:04 AM | அ+அ அ- |

தேனியில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிா் அமைப்பினா்.
தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேனி பங்களாமேடு திடலில், சா்வதேச பெண்கள் மீதான வன்கொடுமை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில பெண்கள் இயக்கத் தலைவா் எம். பிரபா தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், மகளிா் சங்கங்கள் மற்றும் பெண்கள் கூட்டமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.