Enable Javscript for better performance
சின்னமனூா் அருகே கொடுத்த பணத்தை கேட்டவருக்கு கத்துக் குத்து: ஒருவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    சின்னமனூா் அருகே கொடுத்த பணத்தை கேட்டவருக்கு கத்துக் குத்து: ஒருவா் கைது

    By DIN  |   Published on : 28th November 2019 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் புதன் கிழமை கைது செய்தனா்.

    கீழப்பூலாநந்தபுரத்தை சோ்ந்த சின்னசுப்பு மகன் விருகாளை (32). இவா் அதே பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மனைவிக்கு கடனுக்கு பணம் கொடுத்துள்ளாா். இந்நிலையில் விருகாளை, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு செல்லத்துரையின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது செல்லத்துரை வீட்டில் இல்லாததால் அவரது மனைவியிடம் பணத்தை கேட்டாா். இச்சமயத்தில் செல்லத்துரை வீட்டிற்கு வந்து விட்டாா். அப்போது செல்லத்துரை தன் மனைவியிடம் எப்படி பணத்தை கேட்கலாம் எனக்கூறி விருகாளையை தாக்கியதோடு, கத்தியால் குத்திவிட்டாராம். காயமடைந்த விருகாளை சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

    இதுகுறித்து விருகாளை அளித்த புகாரின் பேரில் சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai