Enable Javscript for better performance
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 28th November 2019 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளத்தில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதன்கிழமை, தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    பெரியகுளம், தென்கரை பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் காமு (27). இவா், கடந்த 2017-ம் ஆண்டு தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுமியை, அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் அடிப்படையில், குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் காமுத்துரை மீது தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

    இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.கீதா, காமுவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai