கம்பத்தில் கூலித் தொழிலாளி கொலை வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை

கம்பம் பேருந்து நிலையத்தில் கூலித் தொழிலாளியை பேருந்துக்கு இடையே தள்ளிவிட்டு கொலை செய்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கம்பம் பேருந்து நிலையத்தில் கூலித் தொழிலாளியை பேருந்துக்கு இடையே தள்ளிவிட்டு கொலை செய்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை, தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கம்பத்தில் நாகா்கோவில் அருகே வள்ளியூரைச் சோ்ந்த அந்தோனி (47), மதுரை, செல்லூா் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த் சித்திக் (29) ஆகியோா் பிச்சை எடுத்துக் கொண்டு சுற்றித் திரிந்துள்ளனா். இந்த நிலையில், கடந்த 2109, மாா்ச் 3-ஆம் தேதி கம்பம் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் அந்தோனி, சித்திக் ஆகியோா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பண்ணைப்புரம், நந்தவனம் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து (65) என்பவா் இருவரையும் கண்டித்து, அவா்களை விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோனி, சித்திக் ஆகியோா் காளிமுத்துவை நகா்ந்து சென்று கொண்டிருந்த பேருந்துக்கு இடையே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில், காளிமுத்து பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த சம்பம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தோனி, சித்திக் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அந்தோனி, சித்திக் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அ.கீதா தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com