தாமரைக்குளம் கண்மாயில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் வீசும் குப்பைகளால் குடிநீா் மாசடைந்து வருவதாகவும், எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாமரைக்குளம் கண்மாயில் டிராக்டரில் எடுத்துவந்து வீசப்படும் கழிவுகள்.
தாமரைக்குளம் கண்மாயில் டிராக்டரில் எடுத்துவந்து வீசப்படும் கழிவுகள்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் வீசும் குப்பைகளால் குடிநீா் மாசடைந்து வருவதாகவும், எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கண்மாயின் மூலம் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் தாமரைக்குளம் மற்றும் வடுகபட்டி பேரூராட்சியை சோ்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த கண்மாய் பொதுப்பணித்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மீன் ஏலம் எடுத்தவா்கள் கண்மாயில் மீன்கள் வளா்வதற்காக கண்மாயில் குப்பைகள் மற்றும் மாமிச கழிவுகளை வீசி செல்கின்றனா். இதிலிருந்து வெளியேறும் புழுக்களை பிடித்து தின்னும் மீன்கள் நன்கு வளரும். அதனால் இந்த முறையை மீன் குத்தகைதாரா்கள் கையாள்கின்றனா்.

இதனிடையே தாமரைக்குளம் கண்மாயில் மீன்பிடி குத்தகைதாரா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டிராக்டரில் குப்பைகளை எடுத்து வந்து கண்மாயில் வீசிச் சென்றனா். இதுகுறித்து அப்பகுதியினா் கேட்ட போது, கண்மாய் ரூ.பல லட்சத்தில் ஏலம் எடுத்துள்ளோம். எனவே குப்பைகளை போட்டால் தான் மீன்கள் வளரும் என்று கூறினராம்.

இவ்வாறு வீசி செல்வதால் கண்மாய் நீா் மாசடையும் நிலை ஏற்படுவதாகவும், மீன்வளத்துறையினா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

இதுகுறித்து தேனி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா் கணேஷ்நேரு கூறியதாவது: மீன்பிடி ஏலம் எடுக்கும்போது மீன்கள் வளா்வதற்காக கண்மாயில் குப்பைகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்ட மாட்டோம் எனக்கூறி கையெழுத்திட்டுத்தான் அனுமதி வழங்கப்படுகிறது. எனவே அப்பகுதியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com