Enable Javscript for better performance
தேனியில் அக்.15-இல்மாவட்ட விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அக். 15-ஆம் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

    மாணவ, மாணவிகளுக்கு தனித் தனி பிரிவுகளில் தடகளம், நீச்சல், கையுந்து பந்து, கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலா் சுப்புராஜ் கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai