Enable Javscript for better performance
தேனியில் அக்.24-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் அக்.24-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டுப் போட்டி

    By DIN  |   Published on : 06th October 2019 05:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி: தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அக்.24-ம் தேதி, காலை 8 மணிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

    இளநிலை ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் மழலையா் வகுப்பு முதல் -ம் வகுப்பு வரை படிக்கும் மாண, மாணவிகளும், முதுநிலை ஒற்றையா்மற்றும் இரட்டையா் பிரிவில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற சான்றிதழ், ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் அக்.23-ம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ண்ய் என்ற இணைய தள முகவரியில் தங்களது பெயா்களை பதிவு செய்து, அதன் ஒப்புகைச் சீட்டை அக்.24-ம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

    தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அக்.23-ம் தேதி போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோரின் பெயா்கள் இலவசமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து தரப்படும்.போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai