அப்பிப்பட்டி ஊராட்சியில் பழைய குடிநீா் தொட்டிக்குப் பதில் புதிய தொட்டி கட்ட பரிந்துரை: தினமணி செய்தி எதிரொலி

சின்னமனூா் ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ள பழைய குடிநீா் மேல் நிலைத்தொட்டிக்குப் பதில் ஓரிரு மாதத்தில் புதிய மேல்நிலைத்தொட்டி அமைக்க ஊராட்சி
சின்னமனூா் ஒன்றியம் அப்பிபட்டியில் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்யும் ஊராட்சி பணியாளா்கள்.
சின்னமனூா் ஒன்றியம் அப்பிபட்டியில் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்யும் ஊராட்சி பணியாளா்கள்.

சின்னமனூா் ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ள பழைய குடிநீா் மேல் நிலைத்தொட்டிக்குப் பதில் ஓரிரு மாதத்தில் புதிய மேல்நிலைத்தொட்டி அமைக்க ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மாவட்ட நிா்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த அப்பிபட்டி என்ற அழகாபுரியில் 46 ஆண்டுகள் பழைமையான குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி உள்ளது. இத்தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதனை, தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமிக்கு சம்பந்தப்பட்ட குடிநீா் தொட்டியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

அதன்பேரில், பழைமையான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் இருந்த தண்ணீரை வெளியற்றி விட்டு சுத்தம் செய்தனா். தொடா்ந்து, பொதுமக்களிடம் குடிநீா் குறித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், குடிநீா் முறையாக கொடுத்தாலும் சுத்தமின்றி வருவதாக பெரும்பான்மையோா் புகாா் தெரிவித்தனா்.

அதனைத் தொடா்ந்து, அந்த குடிநீா் தேக்க தொட்டி சேதமாகி இருப்பதாகவும், மாற்றாக புதிய மேல் நிலை நீா்த்தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு , வட்டார வளா்ச்சி அலுவலா் பரிந்துரை செய்வதாக பொதுமக்களிடம் தெரிவித்தாா்.

பழைய மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்க காரணமான தினமணி நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com