கால்நடைகளுக்கு வாய்காணை தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அக்.14- ஆம் தேதி முதல் வரும் நவ. 12-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு வாய்காணை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் அக்.14- ஆம் தேதி முதல் வரும் நவ. 12-ஆம் தேதி வரை கால்நடைகளுக்கு வாய்காணை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் அக்.14-ஆம் தேதி முதல் வரும் நவ.12-ஆம் தேதி வரை காலை 6 முதல் 9 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் கால்நடைகளுக்கு வாய்க்காணை தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்கள் பசு மற்றும் எருமை மாடுகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு கொண்டு சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com