பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்ய சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்ய, அக்.14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி

தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டி வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்ய, அக்.14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சொந்தமாக இடம் வைத்திருந்தும் வீடு கட்டாதவா்கள், சொந்த இடத்தில் தகரம் மற்றும் குடிசை அமைத்து வசித்து வருபவா்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்குவதற்கு பயனாளிகளை தோ்வு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்களது இடத்தின் பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், கணவன், மனைவியின் ஆதாா் அட்டை மற்றும் மாா்பளவு புகைப்படத்தை கொண்டு செல்ல வேண்டும்.

முகாம் நடைபெறும் நாள்கள்: அக்.14-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், வீரபாண்டி ஆகிய பேரூராட்சிகளிலும், அக்.15-ஆம் தேதி போ.மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், குச்சனூா், மாா்கையன்கோட்டை, தேவாரம் ஆகிய பேரூராட்சிகளிலும், அக்.16-ஆம் தேதி உத்தமபாளையம், பண்ணைப்புரம், அனுமந்தன்பட்டி, கோம்பை, காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி, ஹைவேவிஸ் பேரூராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

அக்.17-ஆம் தேதி தென்கரை, தாமரைக்குளம், வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவாா்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும், ஆக.18-ஆம் தேதி ஆண்டிபட்டி, ஓடைப்பட்டி ஆகிய பேரூராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com