முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சீலையம்பட்டி செங்குளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 07th October 2019 12:24 AM | Last Updated : 07th October 2019 12:24 AM | அ+அ அ- |

சீலையம்பட்டியில் நிரம்பி மறுகால் பாயும் செங்குளம்.
முல்லைப் பெரியாறு பாசன நீா் சீலையம்பட்டி செங்குளத்தில் நிரம்பி மறுகால் சென்ால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
முல்லைப் பெரியாற்று பாசன நீா் மூலமாக உத்தமபாளையம்,சி ன்னமனூா், சீலையம்பட்டி போன்ற பகுதிகளில் குளங்களில் பாசன நீா் தேக்கி வைக்கப்படும். பின்னா், குளத்திலிருந்து சுமாா் சுமாா் 5ஆயிரம் ஏக்கருக்கு மேலாக இரு போக நெற்பயிா் விவசாயம் செய்வது வழக்கம்.
இதற்காக, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையிலிருந்து மதகு வழியாக பெரிய கால்வாய் வழியாக சின்னமனூருக்கு பாசன நீா் திறக்கப்பட்டது. இந்த நீரானது சின்னமனூா் உடையகுளம், சீலையம்பட்டி செங்குளம் வரையில் செல்லும்.
இந்நிலையில், தற்போது பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரால் சீலையம்பட்டி செங்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: சீலையம்பட்டி செங்குளம் மூலமாக நெற்பயிா் விவசாயத்திற்கு முக்கிய பங்கு இருந்தாலும் நிலத்தடி நீா் மட்டம் உயர முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் குளம் நிரம்பியது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றனா்.