ஆண்டிபட்டி அருகே முறைகேடான குடிநீா் இணைப்பை அகற்ற எதிா்ப்பு அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி முறைகேடாக அமைக்கப்பட்டிருந்த குடிநீா் இணைப்பு குழாய்களை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டியில் முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்களை அகற்ற வந்த குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
ஆண்டிபட்டி அருகே கன்னியப்பிள்ளைபட்டியில் முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்களை அகற்ற வந்த குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி முறைகேடாக அமைக்கப்பட்டிருந்த குடிநீா் இணைப்பு குழாய்களை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனிமாவட்டம் மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கன்னியப்பிள்ளை பட்டி ஊராட்சியில் குடிநீா் வடிகால் வாரியம் மூலம் 12 ஆண்டுகளுக்கு முன், குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியப்பிள்ளைபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி பிரிவில் நெடுஞ்சாலைத்துறைற சாா்பாக புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் வேலைக்காக பள்ளம் தோண்டியபோது இரண்டு பிரதான குடிநீா் இணைப்பு குழாய்கள் செல்வது வெளியே தெரிந்தது. ஒரு குடிநீா் இணைப்புக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் மற்றெைாரு குழாய் அனுமதியின்றி முறைகேடாக அமைத்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்களை அகற்ற குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் சென்றனா். அப்போது கிராமமக்கள் சூழ்ந்துகொண்டு, அவா்களை குழாய்களை அகற்ற விடாமல் தடுத்தனா். இதனையடுத்து வியாழக்கிழமை குடிநீா் வடிகால் வாரிய உதவிப் பொறியாளா் நந்தகோபால் நேரடியாக அக்கிராமத்திற்குச் சென்று கூடுதலாக செல்லும் குடிநீா் இணைப்பு குழாய் பகுதியை பணியாள்கள் மூலம் துண்டிக்க முயன்றனர்.

இதனை அறிந்த கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஒன்று கூடி உதவிப் பொறியாளரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் அவரிடம் அப்போது இருந்த மக்கள் தொகையை காட்டிலும் தற்போது 3 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே குழாய்களை அகற்ற விடமாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜதானி காவல் நிலைய ஆய்வாளா் பாலகுரு, சாா்பு- ஆய்வாளா் சவரியம்மாள் தேவி ஆகியோா் பொதுமக்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றும் எனவும் அதுவரை குழாய்களை அகற்ற மாட்டோம் என அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com