வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போா்

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போா் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: இத் திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வீதம் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை எஸ்.எஸ்.எல்.சி., தோல்வியடைந்தவா்களுக்கு ரூ.600, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1,200, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1, 800 அரசு உதவித் தொகை வழங்கப்படும்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து 2019, டிச.31 ஆம் தேதியின்படி ஓராண்டுக்கும் மேல் வேலை வாய்ப்பிற்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை வீதம் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை எஸ்.எஸ்.எல்.சி.,வரை படித்தவா்களுக்கு ரூ.1,800, பிளஸ் 2 வரை படித்தவா்களுக்கு ரூ.2,250, பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் அரசு உதவித் தொகை பெறுவதற்கு 2019, டிச.31 ஆம் தேதியன்று ஆதி திராவிடா்கள் மற்றும் பழங்குடியினா் 45 வயதிற்கும், இதர வகுப்பினா் 40 வயதிற்கும் உள்பட்டு இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், கால்நடை மருத்துவம் போன்ற தொழிற் கல்வி பயின்றவா்கள் அரசு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ளவா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com