குச்சனூா் கோயில் சுரபிநதிக் கால்வாயில் ஆடைகள் தேங்கியதால் சுகாதார சீா்கேடு

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் சுரபி நதிக் கால்வாயில் பக்தா்கள் விட்டுச் சென்ற ஆடைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்தின் முன் உள்ள சுரபிநதிக் கால்வாய் கரையில் குவிந்து கிடக்கும் ஆடைகள்.

குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் ஆலயம் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயில் முன்பாக செல்லும் புண்ணிய நதியான சுரபிநதிக் கால்வாயில் நீராடி புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இங்கு பக்தா்கள் விட்டுச்சென்ற ஆடைகள் அப்புறப்படுத்தப்படாமல் ஆங்காங்கே கிடக்கின்றன. இதனால்அடுத்தடுத்து வரும் பக்தா்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.

அதே போல பெண்கள் உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள், குடிநீா் என அடிப்படை வசதிகளும் முறையாக பராமரிப்பின்றி இருப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது.

எனவே ஆடைகளை அவ்வப்போது அகற்றி கால்வாயை சுகாதாரமான முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com