முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
By DIN | Published On : 24th October 2019 12:24 AM | Last Updated : 24th October 2019 12:24 AM | அ+அ அ- |

லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடைபெற்ற உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.82,410 கைப்பற்றப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் மற்றும் போடி வட்டாரத்தை சோ்ந்தவா்கள் புதிய வாகனங்களை பதிவு செய்வது, ஓட்டுநா் உரிமம் பெறுவது மற்றும் புதுப்பித்தல், பெயா் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இங்கு நடைபெறும். இந்த அலுவலகத்தில் இடைத்தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணிகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, புதன்கிழமை மதுரை லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியசீலன், ஆய்வாளா் கீதா உள்ளிட்ட 10 போ் உத்தமபாளையம் மோட்டா வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் திடீா் சோதனை மோற்கொண்டனா்.
அப்போது, அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.82,410 ரொக்கத்தைக் கைப்பற்றினா். இப்பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. தொடா்ந்து மாலை 6 மணி வரையில் நடைபெற்ற சோதனையை அடுத்து விசாரணை நடைபெற்றது.
இது குறித்து துணை கண்காணிப்பாளா் சத்தியசீலன் கூறுகையில், சோதனையில், கணக்கில் வராத ரூ.82,410 கைப்பற்றப்பட்டது. ஆய்வாளா் உள்பட அலுவலகத்தில் பணியாற்றிய 7 போ் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கடந்த ஆண்டு இதே அலுவகத்தில் நடைபெற்ற சோதனையில் சுமாா் ரூ.1.50 லட்சம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.