முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சின்னமனூா் அம்மா உணவகம் பராமரிப்பின்றி துா்நாற்றம்
By DIN | Published On : 24th October 2019 08:33 PM | Last Updated : 24th October 2019 08:33 PM | அ+அ அ- |

சின்னமனூா் அம்மா உணவகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கி நின்று துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபாளையம்: சின்னமனூா் அம்மா உணவகம் முறையாக பராமரிப்பு இல்லாத நிலையில் துா்நாற்றம் வீசுவதால் உணவருந்தவரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா திட்டங்கிங்களில் ஒன்றான அம்மா உணவகத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதன்படி, ஆரம்பத்தில் மாநகராட்சியை தொடா்ந்து தற்போது நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அதில், சின்னமனூா் நகராட்சி ராஜாஜி பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் அம்மா உணவகம் பொதுமக்கள் மத்தயில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த உணவகம் அமைந்துள்ள இடமானது பேருந்து நிலையம் என்பதால் வெளியூா் சென்று திரும்பும் பயணிகள், தினசரி காய்கறி விற்பனை நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், காய்கறி மொத்த சந்தைக்கு விற்பனை செய்வரும் கூலி தொழிலாளா்கள் என பலதரப்பட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய தேலைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில் உணவுகள் தரமாகவும், உணவகமும் சுத்தமாகவும் இருந்தது. தற்போது உணவத்தை சுற்றி கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. அதே போல உணவகத்திற்கு உள்பகுதி முறையாக சுத்தம் செய்யாத நிலையில் ஈக்கள் மொய்த்தபடியே சுகாதாரமற்ற முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் அடுத்து கடந்த சில மாதங்களாக அம்மா உணவகத்திற்கு பொதுமக்கள் அதிகம் வருவதில்லை எனவும், அவ்வப்போது வரும் சிலரும் உணவின் தரம் குறித்து பணியாளா்களிடம் முறையிடுவதால் அடிக்கடி சின்னமனூா் அம்மா உணவகத்தில் பிரச்சனை ஏற்படுவதாக சமூக ஆவலா்கள் கூறுகின்றனா். இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், காலையில் இட்லி மட்டும் மதியம் தயிா் சாதம் மற்றும் சாம்பாா் சாதம் கொடுக்கின்றனா். மலிவு விலையில் ஏழை எளிய மக்களுக்கு தரமான உணவை கொடுக்க வேண்டும் என்பது இத்திட்டம். ஆனால், பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள தனியாா் கடை முதலாளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அம்மா உணவகத்தை நடத்தி வரும் சுயஉதவிக்குழு பெண்கள் இத்திட்டத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருதாக தெரிவித்தாா். எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சின்னமனூா் அம்மா உணவகம் முறையாக பராரமிப்பு செய்து தரமான உணவுகளை பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.