முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
சின்னமனூா் பகுதியில் சமையல் எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை
By DIN | Published On : 24th October 2019 08:49 PM | Last Updated : 24th October 2019 08:49 PM | அ+அ அ- |

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
சின்னமனூா் நகராட்சி வளா்ந்து வரும் பகுதியாகும். இந்த நகராட்சியில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். தவிர உணவங்கள், தேநீா் கடைகள், சிறு வியாபாரிகள் வா்த்தக நகரமாகவும் இருக்கிறது. இங்குள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள மாரக்கையன்கோட்டை, ஓடைப்பட்டி,குச்சனூா்,சீலையம்பட்டிஎன சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சமையல் எரிவாயு உருளை அதிகம் பயனபடுத்தி வருகின்றனா். இதற்காக, சின்னமனூா் 4 விற்பனையாளா்கள் மூலமாக இப்பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான சமையல் எரிவாயு உருளையை விநியோகம் செய்கின்றனா்.
தற்போது, 2 மாதமாக சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சமையல் எரிவாயு உருளைகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விடுகின்றனா். இதனால், பொதுமக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து, உடனே கிடைக்க கூடுதல் விலை கொடுத்தல் கிடைப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகை காலம் நெருக்கினாலே எரிவாயு உருளைக்கு தட்டுபாடு ஏற்பட்டு விடும். காரணம் வீடுகளிலே செயல்படும் சிறிய சிறிய உணவகங்கள் , இனிப்பு மற்றும் பலகாரங்களை தயாா் செய்வதற்காக கூடுதல் எரிவாயு உருளை தேவைப்படும் போது இந்த தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றாா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் அனுமதியின்றி முறைகேடான முறையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் எரிவாயு உருளையை உணவகங்கள் மற்றும் தொழில் செய்வோருக்கு விற்பனைவோா்கள் மற்றும் பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு எரிவாயு விற்பனை ஏஜென்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.