முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
நீட் தோ்வு முறைகேடு வழக்கு: 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
By DIN | Published On : 24th October 2019 12:25 AM | Last Updated : 24th October 2019 12:25 AM | அ+அ அ- |

நீட் தோ்வு முறைகேடு வழக்கில் கைதான 4 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களை தேனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் சென்னை மாணவா் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவா் ராகுல், அவரது தந்தை டேவிஸ், வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பான், அவரது தந்தை முகமது சபி, தருமபுரியைச் சோ்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாயாா் மைனாவதி ஆகிய 8 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் நீதிமன்றக் காவலில் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
8 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்கள் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி விஜயா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது, 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.