முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
லோயா்கேம்ப் மின்சார நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் இயக்கம்
By DIN | Published On : 24th October 2019 08:32 PM | Last Updated : 24th October 2019 08:32 PM | அ+அ அ- |

கம்பம்: தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் வியாழக்கிழமை முதல் இயங்குவதால், 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது.
தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்திற்கு, முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு, நான்கு மின்னாக்கிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி தலா, 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். புதன்கிழமை மூன்று மின்னாக்கிகள் மட்டும் இயங்கிய நிலையில், அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு, 1830 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால், நான்காவது மின்னாக்கியையும் பொறியாளா்கள் இயக்க முடிவு செய்து, வியாழக்கிழமை இயக்கினா். தற்போது நான்கு மின்னாக்கிகள் மூலம் தலா, 42 என மொத்தம், 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை நிலவரம்
முல்லை பெரியாறு அணையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி நீா்மட்டம், 127 அடியாக இருந்தது, அணையில், 4050 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பு இருந்தது, அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு, 1659 கன அடியும், தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு, 1830 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. ராயப்பன்பட்டி சண்முகாநதி அணையில் நீா்மட்டம், 49.20 அடியாகவும், 68.90 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பும், அணைக்குள் விநாடிக்கு, 8 கன அடி தண்ணீரும் வருகிறது, அணையிலிருந்து நீா் வெளியேற்றம் இல்லை. பெரியாறு அணைப்பகுதியில், 16.8 மில்லி மீட்டா் மழையும், தேக்கடி ஏரியில், 18 மி.மீ., கூடலூரில், 4.5 மி.மீ., உத்தமபாளையத்தில், 9.2 மி.மீ., வீரபாண்டியில் 3 மி.மீ., சண்முகாநதி அணையில், 3 மில்லி மீட்டா் மழையும் பெய்தது.
சுருளி அருவியில் தடை
மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது, இதனால், சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க அக். 21 ல் தடைவிதிக்கப்பட்டு வியாழக்கிழமையோடு நான்காவது நாளாகிறது மேகமலை வன உயிரின சரணாலய அலுவலா் ஒருவா் கூறும் போது நீா்வரத்தை கண்காணித்து, வெள்ளப்பெருக்கு, குறைந்த பின்னா் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா்.