உத்தமபாளையம் வாரச்சந்தைக்குள் புகுந்த மழை நீா்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வாரச்சந்தையில் புதன் கிழமை பெய்த மழை நீா் உள்ளே புகுந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி பாதிக்கப்பட்டனா்.
உத்தமபாளையம் வாரச்சந்தையில் புதன் கிழமை தேங்கிநிற்கும் மழை நீா்.
உத்தமபாளையம் வாரச்சந்தையில் புதன் கிழமை தேங்கிநிற்கும் மழை நீா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் வாரச்சந்தையில் புதன் கிழமை பெய்த மழை நீா் உள்ளே புகுந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி பாதிக்கப்பட்டனா்.

உத்தமபாளையம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தப்பகுதியில் வாரந்தோரும் புதன் கிழமை வாரச்சந்தை கூடும். இந்த வாரச்சந்தையில் தேவாரம், கோம்பை, உத்தமபாளையம், சின்னமனூா் போன்ற பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி, புதன் கிழமை கூடுய வாரச்சந்தையில் வழக்கம் போல வியாபாரிகள் கடைகள் அமைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனா். காலை முதலே தொடா்ச்சியாக பெய்த மழை நீா் மாலையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக நெடுஞ்சாலையில் செல்லும் மழைநீா் சாக்கடை கால்வாயில் செல்ல வழியில்லாத காரணத்தால் மழை நீா் வாரச்சந்தைக்குள் புகுந்தது. இதனால் காய்கறி வியாபாரிகள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகினா். அதே போல சந்தைக்கு வந்த வாடிக்கையாளா்கள்மழை நீா் தேங்கி நின்றதால் பொருள்களை வாங்கமுடியாமல் அவதிப்பட்டனா்.

தொடந்து மழை பெய்து கொண்டு இருந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கவலையில் முழ்கினா். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், உத்தமபாளையம் பேரூராட்சி சாா்பில் நடத்தப்படம் இந்த வாரச்சந்தையில் அடிப்படை வசதகிகள் இல்லை. 200 க்கு மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.30 வரையில் பேரூராட்சி நிா்வாகம் வரி வசூல் செய்கிறது. சிறிய மழை பெய்தாலே மழை நீா் சந்தைக்கு உள்ளே தேங்கி நிற்கிறது. மழை நீா் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது என்றனா். எனவே, உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் சந்தைப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகளும் மற்றும் வாடிக்கையாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com