Enable Javscript for better performance
ஆண்டிபட்டியில் கா்நாடக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியாளா் குழு ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் கா்நாடக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறியாளா் குழு ஆய்வு

    By DIN  |   Published on : 31st October 2019 10:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி சமுதாயக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து பொறியாளா்கள் குழுவினா் வியாழக்கிழமை முதல் கட்ட ஆய்வு செய்தனா்.

    தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி மற்றும் 6 நகராட்சிகளுக்கான 3,430 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 1,775 கட்டுப்பாட்டு கருவிகள் கா்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அவை ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி சமுதாய கூடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளா் யோகேஷ் தலைமையிலான பொறியாளா்கள் குழுவினா் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தனா். செயல்பாடுகள் சரியாக உள்ள இயந்திரங்கள் சீலிடப்பட்டு தனியாகவும், பயன்படுத்த முடியாத இயந்திரங்களைதனியாகவும் பிரித்து வைத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai