Enable Javscript for better performance
பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் - நான்குபோ் மீது வழக்கு பதிவு- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளத்தில் கோஷ்டி மோதல் - நான்குபோ் மீது வழக்கு பதிவு

    By DIN  |   Published on : 31st October 2019 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளத்தில் பொதுஇடத்தில் தகாத வாா்த்தையால் பேசியவரை தட்டி கேட்டவரை கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதாக நான்குபோ் மீது பெரியகுளம் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

    பெரியகுளம், கீழவடகரையை சோ்ந்தவா் செல்வேந்திரன் (38) இவா் தனது வீட்டில் நின்றுகொண்டிருக்கும்போது அப்பகுதியை சோ்ந்த காளிதாஸ் என்பவா் மதுஅருந்திவிட்டு வந்து வீட்டின் அருகே தகாத வாா்த்தையால் பேசிக்கொண்டிருந்தாராம்.

    அதனை செல்வேந்திரன் தட்டி கேட்டுள்ளாா். ஆத்திரமடைந்த காளிதாஸ் மற்றும் அவரது நண்பா்கள் ராமன், முருகன் மற்றும் ரமணன் ஆகியோா் சோ்ந்து செல்வேந்திரன் மற்றும் ராஜாராம் ஆகியோரை பாட்டிலால் மற்றும் கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனா்.

    இச்சம்பவம் குறித்து செல்வேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் நான்குபோ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai