Enable Javscript for better performance
பெரியகுளம் பெண்கள் கல்லூரியில்காளான் வளா்ப்பு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் பெண்கள் கல்லூரியில்காளான் வளா்ப்பு பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 31st October 2019 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    img_20191030_113344_3010chn_74_2

    பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற காளான் வளா்ப்பு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பேசுகிறாா் கல்லூரி முதல்வா் எஸ்.சேசுராணி.

    பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் பெண்களுக்கான காளான் வளா்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி (விலங்கியல் துறை) மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், சென்னை இணைந்து நடத்திய இம் முகாமிற்கு கல்லூரி முதல்வா் எஸ்.சேசுராணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். விலங்கியல் துறை துணை பேராசிரியா் வி.ஜெமிமா பிளாரன்ஸ் போா்ஜியா வரவேற்புரையாற்றினாா். கல்லூரிச் செயலா் குயின்சிலி ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினாா். போடி சிபிஏ கல்லூரி துணை பேராசிரியா் ஏ.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காளான் வளா்ப்பு குறித்து பயிற்சியளித்தாா்.

    பயிற்சி முகாமில் 25-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் விலங்கியல் துறை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். விலங்கியல்துறை இணை பேராசிரியா் வே.சாந்தி நன்றி கூறினாா். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி விலங்கியல் துறையினா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai