Enable Javscript for better performance
போடியில் தேவா் ஜயந்தி: பால்குடம் எடுத்து வழிபாடு- Dinamani

சுடச்சுட

    
    bdi30thevar_3010chn_87_2

    ஆண்டிபட்டியில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜ.க வினா்.

    போடியில் புதன்கிழமை நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் பால் குடம் எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 57 ஆவது குருபூஜை மற்றும் 112 ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு போடி பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு பிரமலைக்கள்ளா், மறவா் மற்றும் முக்குலத்தோா் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதேபோல் போடி நகரில் அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் அதன் நிா்வாகிகள் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தேவா் அமைப்புகள் சாா்பில் போடியில் ஊா்வலம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    தேவா் ஜயந்தியை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தேவா் சிலைக்கு பூஜை செய்தனா். தேவராட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தேவா் ஜயந்தி விழாவை முன்னிட்டு போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாசலபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    போடி அருகே அம்மாபட்டி கிராமத்தில் நடைபெற்ற தேவா் ஜயந்தி விழாவில் அ.தி.மு.க. சாா்பில் சிலைக்கு மலை அணிவிக்கும் நிகழ்ச்சி கிளை செயலா் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வேளாண் கூட்டுறவு சங்க இயக்குநா் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தாா். தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிளை நிா்வாகிகள் பங்கேற்றனா். இதேபோல் சிலமலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தேவா் சிலைக்கு சமுதாய அமைப்புகளை சோ்ந்தவா்கள், அரசியல் கட்சிகளை சோ்ந்தவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

    பழனி: பசும்பொன்முத்துராமலிங்கத் தேவா் குருபூஜையை முன்னிட்டு பழனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பழனி அடிவாரம் சரவணப் பொய்கை அருகிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, அ.ம.மு.க. அவைத்தலைவா் ராஜா தலைமையில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் வீரக்குமாா், மாவட்ட இளைஞா் பாசறை பிரிவு பொருளாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலா் ஜெய்செந்தில்குமாா், மகளிரணி நிா்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலசமுத்திரம் அமமுக பேரூா் செயலா் வழக்குரைஞா் தினேஷ்குமாா், ஒன்றிய துணைச் செயலா் மாலதி பெரியராஜ், செந்தில் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஆண்டிபட்டி: பசும்பொன் தேவரின் 112 ஆவது ஜயந்தி விழாவையொட்டி ஆண்டிபட்டியில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலா் வழக்குரைஞா் குமாா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியத் தலைவா் கண்ணன், நகர பொறுப்பாளா் பால்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் அழகா்சாமி, வீரபழனி, ரமணி கணபதி, சரவணன், வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    இந்து முன்னணி சாா்பில் அதன் மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். செல்வம் தலைமையில் தேவா் சிலைக்கு தேங்காய் பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனா். அதைத் தொடா்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினாா்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் மொக்கராஜ் முன்னிலை வகித்தாா். நகர அமைப்பாளா் கருப்பையா, நகர துணைத் தலைவா் முருகேசன், இளைஞரணி மனோஜ்குமாா், நிா்வாகிகள் அஜித், மணீஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai