சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு பொது விநியோகத் திட்டம் சார்பில், தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் சனிக்கிழமை குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
        இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தேனி வட்டாரம் உப்பார்பட்டி, பெரியகுளம் வட்டாரம் மீனாட்சிபுரம், ஆண்டிபட்டி வட்டாரம் ரெங்கசமுத்திரம், உத்தமபாளையம் வட்டாரம் லோயர்-கேம்ப், போடி வட்டாரம் உப்புக்கோட்டை ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு, பொது விநியோகத் திட்டம் சார்பில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
        இம்முகாமில், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, நியாய விலைக் கடைகளின் செயல்பாடு, பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய குடும்ப அட்டை, குடும்ப திருத்தப் பதிவு ஆகியன குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai