சுடச்சுட

  

  ஆண்டிபட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கார் ஓட்டுநரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
         தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி (26). இவர், அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் (38) என்பவர் தனது காரை கடையை மறித்து நிறுத்தினாராம். எனவே, காரை தள்ளி நிறுத்துமாறு பாண்டிச்செல்வி  கூறியதற்கு, சுரேஷ் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், பாண்டிச்செல்வியை தாக்கவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
        அதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக சுரேஷ் மீது மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பாண்டிச்செல்வி புகார் தெரிவித்தார். 
     அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai