Enable Javscript for better performance
தேனியில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேனியில் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 05:15 AM  |   அ+அ அ-   |    |  

    தேனியில் தேசிய புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஅலிஜின்னா தலைமை வகித்தார். நிதிக்காப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
    இதில், தேசிய புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 
    ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாறுதல் நடவடிக்கைகள், காவல் துறை வழக்குகள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினர்.

    kattana sevai