Enable Javscript for better performance
பெரியகுளம் அருகே அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

    By DIN  |   Published on : 14th September 2019 05:15 AM  |   அ+அ அ-   |    |  

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அடர்குறுவன மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.ரேணுகாதேவி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.  மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு , மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அடர்குறுவனத்தில் பள்ளி குழந்தைகள் 750 மரக் கன்றுகளை நடவு செய்தனர்.
    சிறப்பு விருந்தினர்களாக ரீடோ தொண்டு நிறுவன செயலர் கஸ்தூரி, கோவை  குளங்கள் பாதுகாப்பு  இயக்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்,  பசுமை செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மோகன்,  தேசிய பசுமைப் படை  ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். பள்ளிகளின் வேளாண் கல்வி பயிற்றுநர் ரீடோ விஜயராஜா அடர்குறுவன பணிகளை செய்திருந்தார்.

    kattana sevai