கம்பத்தில் பள்ளி மாணவர்களுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் பயிற்சி

தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மன இறுக்கம் மற்றும் ஞாபக சக்தியை அதிகரித்தல், போன்றவைகளுக்கான பயிற்சி தமிழ்நாடு யோகாசன சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது. இப் பயிற்சி முகாமுக்கு தாளாளர் எம்.எஸ்.காந்த வாசன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் 
சுகன்யா காந்த வாசன் முன்னிலை வகித்தார். 
தமிழ்நாடு யோகாசன சங்க மாநிலத் தலைவர் யோகி நீ .ராமலிங்கம் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து, யோகாசனங்களை செய்து காட்டினார். முன்னதாக முதல்வர் புவனேஷ்வரி வரவேற்று பேசினார்.  துணை முதல்வர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணைமுதல்வர் லோகநாதன், யோகா ஆசிரியர்கள் துரை.ராஜேந்திரன், ரவிராம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com