Enable Javscript for better performance
கம்பம் அருகே வனப் பகுதியில் யானை சாவு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம், கம்பம் அருகே வனப் பகுதியில் நோய் தாக்கி பெண் யானை இறந்து கிடந்தது.
          தேனி மாவட்டம், கம்பம் கிழக்கு வனச்சரகம் நாராயணத்தேவன்பட்டி பீட், கூத்தனாட்சி மலை அடிவாரம் நடு ஆறு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை, அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்ற வனக் காவலர்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
          அதன்பேரில், உதவி வனப் பாதுகாவலர் குகனேஷ், வனச்சரகர் ஜீவனா மற்றும் கால்நடை மருத்துவர்கள் காமேஷ்கண்ணன், கலையழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்து கிடந்த யானையை உடற்கூறு ஆய்வு நடத்தி, அங்கேயே புதைத்தனர்.
          இது குறித்து மருத்துவர் கூறியது: இறந்த பெண் யானைக்கு 25 வயது இருக்கும். இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்து 3 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai