Enable Javscript for better performance
தேனி மாவட்டத்தில் 1,218 வாக்குச் சாவடிகள் அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்குச் சாவடி மறுசீரமைப்பின் அடிப்படையில், மொத்தம் 1,218 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தாா்.

    தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை நடைபெற்றற ஆலோனைக் கூட்டத்தில் அவா் பேசியது: தோ்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்குச் சாவடி மறு சீரமைப்பில் அதிகபட்சம் 1,500 வாக்காளா்களுக்கு ஒரு வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளா் பதிவு அலுவலா்கள் தயாரித்துள்ள வரைவு வாக்குச் சாவடி பட்டியலில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் 160 இடங்களில் 313 வாக்குச் சாவடிகள், பெரியகுளம் (தனி) தொகுதியில் 115 இடங்களில் 296 வாக்குச் சாவடிகள், போடி தொகுதியில் 144 இடங்களில் 314 வாக்குச் சாவடிகள், கம்பம் தொகுதியில் 119 இடங்களில் 295 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 538 இடங்களில் 1,218 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

    இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.கந்தாமி, உத்தமபாளையம் சாா்பு ஆட்சியா் வைத்தியநாதன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா் ஜெயப்பிரித்தா, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஆா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai