Enable Javscript for better performance
பெரியகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல்: வாக்காளர் பட்டியல்  வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தல்: வாக்காளர் பட்டியல்  வெளியீடு

    By DIN  |   Published on : 25th September 2019 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை சங்கங்கள் வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
          பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் 32 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்களுக்கு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சங்கங்கள்வாரியாக நில உரிமையாளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.       இந்தப் பட்டியலை விவசாயிகள் பார்வையிட்டு, திருத்தங்கள் இருப்பின்  ஒரு வாரத்துக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்து திருத்தம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai