Enable Javscript for better performance
போடியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    போடியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th September 2019 08:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடி நகராட்சிப் பகுதியிலுள்ள குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என, நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
          இது குறித்து போடி நகராட்சிக் கட்டடப் பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போடி நகராட்சியில் வீடு வீடாக மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வலியுறுத்தி, அதிகாரிகள் துண்டுப்பிரசுரம் வழங்கி வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மழைநீர் சேகரிப்பு அமைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.
         தற்போது, தண்ணீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.
       இதன் எதிரொலியாக, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வீடுகளில் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
          போடி நகராட்சி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கி. ஜெயராமராஜ் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு அமைக்க வலியுறுத்தி துண்டுப்பிரசுரம் வழங்கி வருகின்றனர். இதில், கட்டாயம் மழை நீர் சேகரிப்பு அமைக்க வேண்டும் என்றும், இடம் இல்லாதபட்சத்தில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து முடிவு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai