ஆண்டிபட்டி அருகே கருங்குளம்-செங்குளம் கண்மாய் சீரமைப்புப் பணிகளை விவசாயிகள் ஆய்வு

ஆண்டிபட்டி அருகே ரூ. 84.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கருங்குளம், செங்குளம் கண்மாய்களை, அப்பகுதி

ஆண்டிபட்டி அருகே ரூ. 84.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கருங்குளம், செங்குளம் கண்மாய்களை, அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறையினருடன் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
       தேனி மாவட்டம், ஆண்டிபட்டி  அருகே குன்னூர் கிராமத்தில் உள்ள கருங்குளம், செங்குளம் கண்மாய் சீரமைப்புப் பணிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.84.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இக்கண்மாய்க்கு, வருசநாடு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வரத்து உள்ளது.
       இதற்காக, தமிழக அரசு ஒதுக்கிய ரூ.84.70 லட்சத்தில் முள்செடிகள் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கருங்குளம் கண்மாய் கரையில் இரு கண்மாய்கள் சேரும் இடத்தின் உள்புறம் காங்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
      இந்த சீரமைப்புப் பணிகளை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் பொதுப்பணித் துறையினர் முன்னிலையில் ஆய்வு செய்தனர். இது குறித்து அப்பகுதி ஆயக்கட்டு விவசாய சங்கத் தலைவர் குணசேகரன் கூறியது:
     கருங்குளம் கண்மாய் கரை 1,380 மீட்டர் நீளமும், செங்குளம் கண்மாய் கரை 1,332 மீட்டர் நீளமும் கொண்டது. நீர்பிடிப்பு பரப்பு முறையே 42.97 ஏக்கர் மற்றும் 46.68 ஏக்கர் பரப்பு கொண்டுள்ளன. கருங்குளம் கண்மாயில் 6.92 மில்லியன் கன அடி நீரும், செங்குளம் கண்மாயில் 2.76 மில்லியன் கன அடி நீரும் தேக்கி பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில், தற்போது சீரமைப்புப் பணிகள் முடிந்துள்ளன.       இக்கண்மாய்களில் முழு அளவில் தண்ணீரை தேக்கினால், இப்பகுதியில் 352 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.  பல ஏக்கர் நிலங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். தற்போது, சீரமைக்கும் பணி கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர்  சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண்மாய்களின் 2 மடைகள், 2 கலுங்குகள் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
      தென் பகுதியில் வாய்க்கால் சீரமைப்புப் பணி இன்னும் சில நாள்களில் முடிந்துவிடும்.  இந்த ஆண்டு வருசநாடு வைகை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை கண்மாய்களில் முழு அளவில் தேக்கி பயன்படுத்த முடியும். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவர் என்றார்.      இந்த ஆய்வில், பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் கணேசமூர்த்தி, கண்மாய் விவசாயிகள் சங்க செயலர் அசோக்குமார், பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com